சினிமா
கொஞ்சம் மரியாதை கொடுங்க!! சிவகார்த்திகேயனால் கடுப்பான சூரி..

கொஞ்சம் மரியாதை கொடுங்க!! சிவகார்த்திகேயனால் கடுப்பான சூரி..
நடிகர் சூரி தற்போது இருக்கும் நிலைமை அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. வாய்ப்புக்காக பல படங்களில் சைடு ஆர்ட்டிஸ் வேலைகள் உட்பட பல வேலைகள் பார்த்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.வெண்ணிலா கபடி குழு படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான மாமன் படம் வரை மிகப்பெரிய உச்சத்தை பெற்று ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்த சூரி, சிவகார்த்திகேயனுடன் மிகப்பெரிய காம்போ கொடுத்து வந்தார்.தற்போது சிவகார்த்திகேயன் – சூரி இடையே அண்ணன் தம்பி உறவு இருந்து வரும் நிலையில் அவர்கள் பேசிய வீடியோ ஒன்று ஷேர் செய்யப்பட்டு வருகிறது.அதாவது சில வருடங்களுக்கு முன் போட்டியொன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன். அப்போது, சூரி அந்நிகழ்ச்சிக்கு கால் செய்து நான் டான்ஸ் மாஸ்டர் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.உடனே சிவகார்த்திகேயன், சூரிதான் என அசாட்டாக கண்டுபிடித்துவிட்டார். என்னப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு மிமிக்ரி பண்றேன், உடனே கண்டுபிடிச்சிட்டியே என்று சூரி கூறியிருக்கிறார்.அதற்கு சிவா, நீங்க ஹலோன்னு சொல்லும்போதே கண்டுபிடித்துவிட்டேன், சொல்லிட்டா நீங்கள் கஷ்டப்படுவீங்கனு 30 செகண்ட் கழிச்சு சொல்றேன், இதுதான் மிமிக்ரி என்று இப்போதான் கண்டுபிடித்தேன் அண்ணா என்று கூறியிருக்கிறார்.அதற்கு சூரி, தம்பி கஷ்டப்பட்டு மிமிக்ரி பண்றேன், கொஞ்சம் மரியாதை கொடுங்கப்பா என்று ஜாலியாக கூறியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.