Connect with us

இலங்கை

சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து சபாநாயகருக்கு பறந்த கடிதம்

Published

on

Loading

சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து சபாநாயகருக்கு பறந்த கடிதம்

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு தலைவரின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பது குறித்து சபாநாயகருக்கு நினைவூட்டடல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை தலைவர் என்ற அடிப்படையில், நாடாளுமன்ற சபாநாயகருக்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறித்த நினைவூட்டலை அனுப்பியுள்ளது.

Advertisement

இந்த விடயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு முழுமையாக செயற்படத் தேவையான தலைவர் ஒருவரை பரிந்துரைக்குமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பு பேரவையின்மீது, பொதுமக்களின் நம்பிக்கையை கவனத்தில் கொண்டு இந்த விடயம் கையாளப்படவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன இவ்வருட ஆரம்பத்தில் பதவி விலகியதில் இருந்து இதுவரை அந்தப் பதவியை நிரப்ப எந்த நியமனமும் செய்யப்படவில்லை.

Advertisement

எனவே தலைவர் இல்லாத நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடினமாகியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன