பொழுதுபோக்கு
சிம்பிளா இருக்கு, இது வேண்டாம் சார்; தேவா பாட்டுக்கு பந்தயம் கட்டி ஹிட்டடித்த எஸ்.ஜே.சூர்யா: எந்த பாட்டு தெரியுமா?

சிம்பிளா இருக்கு, இது வேண்டாம் சார்; தேவா பாட்டுக்கு பந்தயம் கட்டி ஹிட்டடித்த எஸ்.ஜே.சூர்யா: எந்த பாட்டு தெரியுமா?
2000-ம் ஆண்டில் வெளியான ‘குஷி’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு காதல் காவியமாக அமைந்தது. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் தனித்துவமான இயக்கமும், விஜய் மற்றும் ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பும், அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன. ஆனால், அப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இசையமைப்பாளர் தேவாவின் மாயாஜால இசையில் உருவான பாடல்களும்தான்.குறிப்பாக, ‘மேகம் கருக்குது’ பாடல் தமிழ் இளைஞர்கள் இன்று வரை வைப் செய்கின்றனர். இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால், இசையமைப்பாளர் தேவாவுக்கே வியப்பை ஏற்படுத்திய ஒரு சுவாரசியமான அனுபவத்தை பற்றி அவரே எஸ்.எஸ்.மியூசிக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தேவாவின் தயக்கமும், எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கையும்’குஷி’ படத்திற்கான பாடல்களை அமைக்கும்போது, ‘மேகம் கருக்குது’ பாடலின் மெட்டை தேவா அமைத்தார். மெட்டை கேட்ட தேவா, இந்த பாடல் மிக எளிமையாக இருப்பதாக உணர்ந்தார். “இது போன்ற ஒரு சாதாரண மெட்டு பெரிய அளவில் வெற்றி பெறுமா?” என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது. தனது கணிப்பு சில நேரங்களில் தவறாகப் போய்விடுமோ என்ற எண்ணத்துடன், அவர் இந்த மெட்டை எஸ்.ஜே.சூர்யாவிடம் கொடுத்தார்.ஆனால், எஸ்.ஜே.சூர்யாவுக்கு அந்தப் பாடல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. பாடலின் எளிமையே அதன் பலம் என்று அவர் உறுதியாக நம்பியதாக தேவா கூறினார். எஸ்.ஜே.சூர்யாவின் இந்த அபார நம்பிக்கை தேவாவையே ஆச்சரியப்படுத்தியது. படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணமாக அமையும் என்று எஸ்.ஜே.சூர்யா உறுதியாக நம்பியதாக தெரிவித்தார். பந்தயம் கட்டிய கார் மற்றும் பைக்இந்த நம்பிக்கையின் உச்சகட்டமாக, எஸ்.ஜே.சூர்யா ஒரு பந்தயம் கட்டினார். ‘மேகம் கருக்குது’ பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், அப்படி வெற்றி பெற்றால் தேவாவின் உதவியாளர் ஒருவருக்கு கார் வாங்கித் தருவதாகவும் அவர் கூறினார். மேலும், படத்தில் இடம்பெற்ற மற்றொரு வெற்றிப் பாடலுக்கு மோட்டார் சைக்கிளும் வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, எஸ்.ஜே.சூர்யாவின் கணிப்பு நூறு சதவீதம் உண்மையானது. ‘மேகம் கருக்குது’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. காதல் ஜோடிகளின் தனிப்பட்ட பாடலாகவே அது மாறியது. அந்தப் பாடலின் வெற்றி, தேவாவின் கணிப்பை மீறி பிரம்மாண்டமானதாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யா தனது வாக்கைக் காப்பாற்றி, தன் உதவியாளர்களுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை வாங்கி பரிசளித்ததாகவும் கூறினார். இன்னும் என்னைய மாதிரி Cinema-க்காக நிறைய பேரு அலையுறாங்க ! – The SS Podcast ft. Deva #Deva #MusicDirectorDeva #DevaPodcast #ThenisaiThendral #ThenisaiThendralDeva #Rajinikanth #SuperstarRajinikanth #DevaSongs #SSMusicஇந்த அனுபவத்தைப் பற்றி பேசும்போது, “சில நேரங்களில் ஒரு இசையமைப்பாளரின் கணிப்பு கூட தவறாகப் போகலாம்” என்று தேவா ஒப்புக்கொண்டார். ஒரு படைப்பாளியின் கணிப்பைவிட, மக்கள் ரசிக்கும் உணர்வுகளே ஒரு பாடலின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்பதையும் அவர் கூறினார்.