சினிமா
ஜீ தமிழில் ஹீரோயினாக மணிமேகலை..சிங்கிள் பசங்களுக்கு காத்திருக்கும் புதிய ஷோ..!

ஜீ தமிழில் ஹீரோயினாக மணிமேகலை..சிங்கிள் பசங்களுக்கு காத்திருக்கும் புதிய ஷோ..!
விஜய் டிவி வாயிலாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான மணிமேகலை, அதன்பின் சீசன் 5இல் தொகுப்பாளராக வலம் வந்தார். எனினும் அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சாயத்து ஏற்பட்டது.இதன்போது விஜய் டிவி சேனல் தரப்பு பிரியங்காவிற்கு சப்போர்ட் பண்ணிய நிலையில் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்தும் சேனலில் இருந்தும் அதிரடியாக வெளியேறி விட்டார். இந்த பரபரப்புக்குப் பிறகு, ஜீ தமிழ் சேனலில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ‘பெஸ்ட் ஹோஸ்ட்’ என்ற பட்டத்தையும் வென்றார். தற்போது, தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடாத்தும் வாய்ப்புகள் அவரை நோக்கி குவிந்து வருகின்றன.இந்த நிலையில், ஜீ தமிழ் சேனலில் ‘சிங்கிள் பசங்க’ எனும் புதிய நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கிளாக இருக்கும் இளைஞர்களின் திறமைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.விஜய் டிவியில் தன்னை நிலைப்படுத்த பல ஆண்டுகள் உழைத்த மணிமேகலைக்கு, தற்போது ஜீ தமிழில் தொலைக்காட்சி வாழ்க் கை புதிய உயரத்தை எட்டச் செய்து வருகிறது. ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஒரு மாஸ் ரீஎன்ட்ரி செய்யப் போகும் மணிமேகலை, ரசிகர்களிடம் எப்படி தன்னை நிலை நிறுத்தப்போகின்றார் என்பதை காலமே தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள்.