பொழுதுபோக்கு
தலை வேற, ஜெஸ்ட் வேற, தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டம்: பிரபல நடிகையை வர்ணித்த நடிகருக்கு சப்புனு விழுந்த அறை!

தலை வேற, ஜெஸ்ட் வேற, தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டம்: பிரபல நடிகையை வர்ணித்த நடிகருக்கு சப்புனு விழுந்த அறை!
தலை தனியா, ஜெஸ்ட் தனியா, இடுப்பு தனியா ஆடுது, என்ன டான்ஸ் இது என்று பிரபல முன்னணி நடிகையை வர்ணித்த என்னை இயக்குனர் கே.பாலச்சந்தர் கன்னத்தில் அரைந்தார் என்று பிரபல நடிகர் பப்லு ப்ரித்விராஜ் கூறியுள்ளார்.தமிழ் சினினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1989-ம் ஆண்டு வெளியான பாண்டி நாட்டு தங்கம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பப்லு ப்ரித்திவிராஜ். தொடர்ந்து அவள் வருவாளா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க தொடங்கினார். மர்மதேசம் தொடங்கி அன்பே வா வரை பல சீரியல்களில் நடித்துள்ள பப்லு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.சமீபத்தில் வெளியான, ஏஸ், இந்தியில் அனிமல், ஜாட் ஆகிய படங்களில் நடித்திருந்த பப்லு ப்ரித்விராஜ், சமீபகாலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார், அந்த வகையில், டேட் வித் அசார் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் முதன் முதலில் சைட் அடித்த பெண் யார் என்று கூறியள்ளார். இந்த நிகழ்ச்சியில், நீங்கள் முதன் முதலில் சைட் அடித்த பெண் யார் என்ற கேள்விக்கு, நடிகை பானுப்பிரியா என்று பதில் அளித்துள்ளார்.மேலும் பேசிய அவர், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை படத்தில் நடித்து வருகிறோம். இந்த படத்திற்காக நாடோடி மன்னர்களே என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடலில் ஒரு மூவ்மெண்ட் வரும். தலை வேற, ஜெஸ்ட் வேற, இடுப்பு வேற, கால் வேற தனித்தனியாக தஞ்சாவூர் பொம்மை மாதிரி அப்படி ஆடும். இதை பார்த்துக்கொண்டிருந்த நான் என் பின்னாள் யாரோ கை வைக்க, பார்ரா மச்சான் எல்லாம் தனித்தனியாக ஆடுது என்று பின்னால் திரும்பினால் பாலச்சந்தர் நிற்கிறார்.திடீரென பளார் என்று ஒரு அறை விட்டார் கன்னத்தில், முண்டம் முண்டம் என்னடா பன்ற போய் வேலைய பாரு என்று சொன்னார். ரொம்ப அழகா இருக்கும் மிரட்டியிருப்பாங்க என்று ப்ரித்விராஜ் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.