Connect with us

இலங்கை

தென்னிந்திய சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

Published

on

Loading

தென்னிந்திய சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல தமிழ்த்திரை நடிகரும் காமெடி நடிகராக பலரின் இதயங்களை கவர்ந்தவருமான மதன் பாப் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

அவர் 71 வயதில் காலமானார்.

Advertisement

இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தியாகும் மதன் பாப், தனது திரை பயணத்தை இசையமைப்பாளராகத் தொடங்கினார்.

பின்னர் நடிகராக மாறி, ‘நீங்கள் கேட்டவை’ என்ற படத்தின் மூலம் silver screen-ல் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார்.

அவர் நடித்த முக்கியமான திரைப்படங்களில் தேவர் மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும் துள்ளும், தெனாலி, குஷி, சிங்கம் 2, எதிர்நீச்சல் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

Advertisement

பன்மொழிப் படங்களிலும் அவரது நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

அவரது டிரேட் மார்க் சிரிப்பே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிரிக்க தொடங்கினால் சில வினாடிகள் தொடர்ச்சியாக சிரித்து அசத்துவார் என்பது அவரது தனித்துவம்.

மேடை நாடகங்கள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என பலதுறைகளிலும் தனக்கென ஒரு அடையாளம் காணப்பட்டவர்.

Advertisement

இளமையில் குத்துச்சண்டை வீரராக இருந்த மதன் பாப், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி, இன்று மாலை 5 மணியளவில் சென்னையின் அடையாறு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

அவரது மறைவு திரையுலகத்தையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன