இலங்கை
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தமிழரசுக் கட்சி எதிர்த்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (02) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர், தமிழரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
“பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.