இலங்கை
பாடசாலை மாணவி திடீர் மரணம் – அனுராதபுரத்தில் சம்பவம்!

பாடசாலை மாணவி திடீர் மரணம் – அனுராதபுரத்தில் சம்பவம்!
அநுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பாடசாலை பேருந்திற்காக வீதியோரம் காத்திருந்த மாணவி திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், மயக்கமடைந்த மாணவியை பாடசாலை சமூகத்தினர் இணைந்து பாடசாலை பேருந்து மூலம் கெக்கிராவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிகிரியாவின் டல்கோட்டில் வசிக்கும் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்தர் ஆவார்.
மாணவியின் மரணம் குறித்து உடலில் தடயவியல் மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.