இலங்கை
பிரதேச சபை தவிசாளர் பயணித்த வாகனம் விபத்து

பிரதேச சபை தவிசாளர் பயணித்த வாகனம் விபத்து
தொடங்கொட பிரதேச சபையின் தவிசாளர் பயணித்த கெப் வாகனம் களுத்துறை, கரன்னாகொட பிரதேசத்தில் வைத்து இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக வரக்காகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த லொறி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொடங்கொட பிரதேச சபையின் தவிசாளர் நிலுஷ கவிரத்ன தனிப்பட்ட தேவைக்காக வரக்காகொட பகுதியிலிருந்து கெப் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது தொடங்கொட பிரதேச சபையின் தவிசாளர் நிலுஷ கவிரத்னவுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கெப் வாகனத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் வரக்காகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.