இலங்கை
புலமைப்பரிசிலை முன்னிட்டு மேலதிக வகுப்புக்களுக்கு தடை!

புலமைப்பரிசிலை முன்னிட்டு மேலதிக வகுப்புக்களுக்கு தடை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பரீட்சை 2,787 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.