இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!!

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!!
வரவிருக்கும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வழிகாட்டல் வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவித்தலில், பரீட்சைக்கான வழிகாட்டல் வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய ஊகக் கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல் என்பன முற்றிலும் தடைசெய்யப்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைத் தாளில் வரக்கூடிய கேள்விகளைப் போன்றோ அல்லது ஒத்த கேள்விகள் இருப்பதாகவோ குறிப்பிட்டு அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் வடிவிலான சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை