இலங்கை
மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ள செம்மணி மனித எலும்புக் கூடுகள்!

மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ள செம்மணி மனித எலும்புக் கூடுகள்!
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புத்தகப்பைகள், ஆடைகள் உள்ளிட்ட பிறபொருட்கள் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
அத்துடன் இன்றும் புதிதாக 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இதுவரையில் 122 மனிதஎலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 27 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 122 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 5ம் திகதி செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் தடயப்பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது – என்றார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை