Connect with us

இலங்கை

மட்டக்களப்பில் கட்டுமானத் தளத்தில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு!

Published

on

Loading

மட்டக்களப்பில் கட்டுமானத் தளத்தில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு!

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று அதற்கான ரவைகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்கள் நேற்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளடது.

Advertisement

லயன்ஸ் கிளப் வீதியில் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வந்த காணி ஒன்றில் இருந்து இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குளியலறை குழியை தோண்டும் போது, பணியாளர்கள் மண்ணுக்குள் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டிருந்த ஒரு பொதியை கண்டெடுத்துள்ளனர்.

அதில் துப்பாக்கி இருப்பதை அவதானித்த அவர்கள் உடனடியாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், அங்கு புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி, அதற்குரிய 50 தோட்டாக்கள் மற்றும் இரண்டு சஞ்சிகைகளை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் மேற்கொண்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன