சினிமா
மாபெரும் அனிமேஷன் திரைப்படம் மஹா அவதார் நரசிம்ஹா…! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மாபெரும் அனிமேஷன் திரைப்படம் மஹா அவதார் நரசிம்ஹா…! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
அஷ்வின் குமார் இயக்கத்தில் உருவான மஹா அவதார் நரசிம்ஹா திரைப்படம் கடந்த வாரம் வெளியானதிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அனிமேஷன் திரைப்படம் விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான நரசிம்ஹாவை மையமாகக் கொண்டது. இதன் கதையாக, விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் வாழ்க்கையும், நரசிம்ஹா அவதாரத்தின் அதிசய சம்பவங்களும் சித்தரிக்கப்படுகின்றன.திரைப்படம் திரைக்கு வந்த முதல் நாளிலேயே ரூ. 1.75 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து, 2-வது நாள் ரூ. 4.6 கோடி, 3-வது நாள் ரூ. 9.5 கோடி மற்றும் 4-வது மற்றும் 5-வது நாளில் சேர்த்து ரூ. 13.7 கோடி வசூலித்துள்ளது. இதுவரை உலகளவில் மொத்தம் ரூ. 53 கோடி வசூலித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் வெற்றியை முன்னிட்டு, இப்போது இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் யூரோப் நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஹொம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படம் ஒரு புதிய சினிமாடிக் யூனிவர்ஸின் தொடக்கமாகும். இந்த யூனிவர்ஸ், 2025 முதல் 2037 ஆண்டுகளுக்குள் விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது