இலங்கை
முட்டை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

முட்டை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் மாற்றும் என சங்கத்தின் தலைவர் புலினா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முட்டை ஓடு முழுமையாக மூடப்படவில்லை. இது மிகவும் நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது.
எனவே, முட்டைகளைக் கழுவும்போது, மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் கழிவுகள் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே நகரும்.
முட்டையின் உள்ளே புரதத்தின் மீது நுண்ணுயிரிகள் செல்லுமானால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும்.
எனவே, முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது தீங்கு விளைவிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.