Connect with us

இலங்கை

யாழிற்கு சுற்றுலா வந்த பிக்கு சடலமாக மீட்பு!

Published

on

Loading

யாழிற்கு சுற்றுலா வந்த பிக்கு சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் நேற்றையதினம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன