இலங்கை
யாழில் தமிழரசின் அரசியல் குழு கூடியது

யாழில் தமிழரசின் அரசியல் குழு கூடியது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (2) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கட்சியின் பிரச்சனை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடின.
கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.