பொழுதுபோக்கு
லெஜண்ட் சீரியஸா நடிக்கிறாரு; என்னால சிரிப்ப அடக்க முடியல: ஷூட்டிங் ஸ்பாட்டில் அமுதவாணன் – தம்பிராமைய சம்பவம்!

லெஜண்ட் சீரியஸா நடிக்கிறாரு; என்னால சிரிப்ப அடக்க முடியல: ஷூட்டிங் ஸ்பாட்டில் அமுதவாணன் – தம்பிராமைய சம்பவம்!
தமிழ் சின்னத்திரையில், முன்னணி காமெடி ஸ்டாராக உருவெடுத்துள்ள அமுதவாணன் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள நிலையில், சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடிப்பில் வெளியான லெஜணட் படத்தில் நடித்தபோது நடந்த சுவாரஸ்யமாக சம்பவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் தனது சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் அருள் சரவணன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கிய ஊர்வசி ருத்வாலா நாயகியாக நடித்த இந்த படத்தில், விஜயகுமார், பிரபு, லிவிங்ஸ்டன், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்தியா படமாக வெளியான தி லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தமிழ் ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினர். அதே சமயம், லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கருடன் படத்தின் மூலம் மீண்டும் நட்சத்திர இயக்குனராக மாறிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயராகி வரும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணா நாயகனாக நடித்து வருகிறார்.இதனிடையே இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பிரபல நடிகர் அமுதவாணன், படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு நவ் யூடியூப் சேனலில் பேசிய அவரிடம், ராமராஜன், அருள் சரவணன் ஆகியோருடன் அவர் இருக்கும் புகைப்படம் காட்டப்பட்டது. இதை பார்த்த அவர், தி லெஜண்ட் படத்தில் நடித்தபோது நடந்த நிகழ்வுகளையும், அருள் சரவணன் எமோஷ்னலாக நடிக்கும்போது தான் சிரித்ததாகவும் கூறியுள்ளார்.படத்தில் நான் மைனராக நடித்திருப்பேன். லெஜண்ட் சரவணாவும், அவரது மனைவியும் காரில் சென்றுகொண்டிருக்கும்போது அவரது மனைவி ஆட்டுக்குட்டி கேட்பார். அதை பிடிக்க இவர் இறங்கும்போது நானும் அவருடன் ஆட்டுக்குட்டி பிடிப்பேன். குட்டியை பிடித்தவுடன், காரில் பாம் வெடித்துவிடும். அவரது மனைவி இறந்துவிடுவார். அப்போது இவர் எமோஷ்னலாக பார்க்க வேண்டும். ஆக்ஷனாக திரும்புங்கள் என்று இயக்குனர் சொல்ல, இவர் எமோஷனாக திரும்பி பார்த்து தலையை ஆட்டுவார். அதை பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.நான் அவரது காலை பிடித்துக்கொண்டு ஐயா என்று கத்திக்கொண்டு கழே குணிந்து சிரித்துக்கொண்டு இருந்தேன். இந்த காட்சி முடிந்தவுடன் அவர் கோவிலுக்கு சென்று வியூதியில் அடித்து சத்தியம் செய்ய வேண்டும். அந்த காட்சிகாக அவர் நகர முயற்சிக்கிறார். ஆனால் நான் காலை விடவில்லை. எனக்கு பின்னால் இருந்த நடிகர் தம்பிராமையா திடீரென வந்து, அவரும் கீழே அழுவது போல் இருந்தார். ஒரு கட்டத்தில் லெஜண்ட் போனவுடன் நான் அவரிடம் கேட்டேன்.என்னணே அழுவுறீங்களா என்று கேட்க, இல்லடா தம்பி சிரிப்ப அடக்க முடியலடா என்று சொன்னார். நீங்களுமா அண்ணே என்று நான் கேட்டேன். இது போன்று இந்த படத்தில் நிறைய சம்பவங்கள் இருக்கிறது என்று அமுதவாணன் கூறியுள்ளார்.