இலங்கை
விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்ட அரச உணவகம்!

விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்ட அரச உணவகம்!
வாரியபொல – பாதெனிய பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரம் கொண்ட உணவகம் ஒன்றுக்கு, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், உணவகத்தின் உரிமையாளரின்
தாக்குதலில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த தாக்குதலில் உணவகத்திலிருந்த உடைமைகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாகவும் இதுபோன்ற கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.