இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 2620 முறைப்பாடுகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 2620 முறைப்பாடுகள்
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 2620 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் கடந்த 7 மாதங்களில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1994 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மீள பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4658 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எனவே இவ்வாறான மோசடிகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.