பொழுதுபோக்கு
ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு செக் வைத்த ‘கூலி’: இளைஞர்கள் ஆதரவு கிடைக்குமா? பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு செக் வைத்த ‘கூலி’: இளைஞர்கள் ஆதரவு கிடைக்குமா? பிரபல தயாரிப்பாளர் பேச்சு!
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் ரூ1000 கோடி வசூலிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்திற்கு தற்போது ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால், வசூலில் சற்று வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் 70 வயதை கடந்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் இயக்கும் 6-வது படம் இதுவாகும்.இந்த படத்தில் நாகர்ஷூனா, சவுபின் சபீர், உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோனிகா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ள இந்த படத்தை முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படம் ரூ1000 கோடி வசூலிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலுக்கு ஷாக் கொடுக்கும் வீதமாக கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாத சூழல் எழுந்துள்ளது இதன் மூலம் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்சேயன் வாவ் தமிழா யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் கூறுகையில், கூலி படம் வெளியாகி இன்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்று நினைத்தேன். ஆனால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுடன் படம் பார்க்க முடியாத நிலை உள்ளது. தலைவன் தலைவி திரைப்படம் இவ்வளவு வசூல் ஆனாதற்கு முக்கிய காரணம் ஃபேமிலி ரசிகர்கள் தான். இவர்கள் வந்தால் குறைந்த்து 6 பேர் படம் பார்ப்பார்கள். ஒரு தியேட்டரில் 400 சீட் இருக்கிறது என்றால் 6 பேர் உள்ள ஃபேமிலி 60 வந்தாலே தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். அதே சமயம் கூலி படத்திற்கு ஃபேமிலி ரசிகர்களை விடுவார்களா என்பது சந்தேகம் தான். படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால், ஃபேமிலி ரசிகர்கள் தியேட்டரில் பார்க்காமல் ஒடிடி தளத்தில் வெளியாகும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் தனுஷின் ராயன் படமும் ஏ சான்றிதழ் பெற்ற படம் தான். இளைஞர்கள் அந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்தால் படம் 150 கோடி வசூலித்த்து. அதன்படி தற்போது கூலி படத்திற்கும் இளைஞர்கள் ஆதரவு இருக்கும் என்று சன்பிச்சர்ஸ் நினைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் வரும் அகஸ்ட் 14-ந் தேதிக்கு மேல் தெரிந்துவிடும். அதுவரை எதுவும் சொல்ல முடியாது என்று தனஞ்சேயன் கூறியுள்ளார்.