இலங்கை
ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்

ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை துறைமுக அதிகாரசபை 66% லாபத்தை பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை 14,691 மில்லியன் ரூபாவினை இலாபமாக பதிவு செய்தது.
இந்தநிலையில் இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் அந்த தொகை 24,418 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த உயர்வுக்கு பெரும்பாலும் கொழும்பு துறைமுகத்தில் அதிகரித்த சரக்கு கையாளுதல் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் பாதியில், கொழும்பு துறைமுகம் 4 மில்லியனுக்கும் அதிகமான இருபது அடிக்கு சமமான கொள்கலன்களை கையாண்டது.
அந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 8 மில்லியன் கொள்கலன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தெற்காசியாவின் முக்கிய கடல்சார் மையமாக கொழும்பு துறைமுகம் தமது நிலையை வலுப்படுத்தி வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவிக்கின்றது.