சினிமா
எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து வேறுபாடு..அவங்களைத்தான் நம்பக்கூடாது!! சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த வார்த்தை..

எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து வேறுபாடு..அவங்களைத்தான் நம்பக்கூடாது!! சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த வார்த்தை..
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது கூலி படம். வஇப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில் மோனிகா பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஆடிய ஆட்டம் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் கூலி படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உழைப்புக்கு மேலே என் வெற்றிக்கு ரகசியம் உண்டு. இது இறைவனின் குரல்.இறைவனின் குரலையும் உங்கள் குரலையும் பிரித்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். சத்யராஜ் இந்த படத்தில் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னதும், அவர் நடிப்பாரா என கேட்டேன். அதற்கு அவரோ, உங்களிடம் சத்யராஜ் கேட்க சொன்னதாக கூறினார்.சிவாஜி படத்தில் நான் என்ன சம்பளம் வாங்கிறேனோ, அதே சம்பளத்தை கொடுக்கிறோம் என்று சொல்லியும் அதில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் ரீதியாக முரண்பாடு இருக்கலாம்.ஆனால் அவர் தனது மனதில் பட்டத்தை சொல்லிவிட்டு போய்விடுவார். மனதில் பட்டதை யார் பேசுகிறார்களோ அவர்களை நம்பலாம், ஆனால் உள்ளேயே வைத்திருக்கிறார்கள் பாருங்கள், அவர்களைத்தான் நம்ப முடியாது என்று மேடையில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.