சினிமா
எல்லாத்துக்கும் காரணம் தேவயானி தான்!! மகளால் எமோஷ்னலான ராஜகுமாரன்..

எல்லாத்துக்கும் காரணம் தேவயானி தான்!! மகளால் எமோஷ்னலான ராஜகுமாரன்..
நடிகை தேவயானி தன் மகள் இனியாவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகப்படுத்தினார். தன் மகள் தன்னுடைய திறமையால் முன்னேறட்டும் என்ற கண்ணோட்டத்தில் இதை செய்வதாக கூறினார் தேவயானி.இதனையடுத்து தேவயானி மகள் இனியாவும் சிறப்பாக பாடி வருகிறார். பல கட்டமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் மகள் இனியா பாடுவதை பார்க்க இந்தவாரம் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மகள் பாடுவதை கண்கலங்கிய படி பார்த்த ராஜகுமாரன், இனியா பாடுவதை கேட்கும்போது தான் ஏதோ சாதித்த மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது.இது எல்லாத்திற்கு காரணம் நானில்லை, என் மனைவி தேவயானி தான். அவள் தான் குழந்தைகளை நன்றாக கவனித்து அவர்களின் திறமையை வெளியில் கோண்டு வர கடுமையாக உழைத்தார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.