Connect with us

இலங்கை

கன மழையால் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து தடைப்பட்டு!

Published

on

Loading

கன மழையால் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து தடைப்பட்டு!

மத்திய மலைநாட்டில் சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று(2) இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது.

Advertisement

இதன் காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டது.

மேலும் கவரவலையில் உள்ள பல இல்லங்களில் வெள்ள நீர் புகுந்ததுள்ளது.

இதன் காரணமாக அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி அம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்  தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையில் இருந்து தற்போது வான் கதவு ஒன்று மூன்று அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து அதிக மழை பெய்யும் பட்சத்தில் ஏனைய வான் கதவுகள் திறந்து விட வாய்ப்புள்ளது என அவர் மேலும் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன