இலங்கை
திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!

திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!
திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து வந்த 33வயதான தேனுவர ஹென்றிகே விநோத் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.