இலங்கை
பெரிய வெங்காயம் இந்தியாவில் இருந்து இறக்குமதி – உள்ளூர் உற்பத்தியளார்கள் குற்றச்சாட்டு!

பெரிய வெங்காயம் இந்தியாவில் இருந்து இறக்குமதி – உள்ளூர் உற்பத்தியளார்கள் குற்றச்சாட்டு!
வெங்காயச் செய்கையில் இருந்து முற்றாக விலக உள்ளதாக உள்ளூர் பெரிய வெங்காய செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது உற்பத்திகளை அறுவடையும் செய்யும் தருணத்தில், நாட்டு மக்களின் பாவனைக்கு பற்றாக்குறையாக இருக்கும் பெரிய வெங்காயம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இவ்வாறு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக தமது அறுவடை பாதிக்கப்படுவதுடன் உரிய விலை கிடைக்காததால் வெங்காயச் செய்கையில் இருந்து முற்றாக விலக உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றனர்.
மாத்தளை மற்றும் தம்புள்ளை பகுதிகளில் 2000 ஏக்கரில் பெரிய வெங்காயம் செய்கை பண்ணப்பட்டுள்ளன. ஆனால் அப்பகுதிகளில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் களஞ்சியசாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்திய வெங்காயம் ஒரு கிலோ 95-100 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதே விலைக்கு எங்களின் உற்பத்திகளையும் கொள்வனவு செய்ய முயல்கின்றனர். எமது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. வேலையாட்கள், பசளை, அறுவடை என அதிக பணம் வழங்க வேண்டியுள்ளது. அவ்வாறு என்றால் எங்கள் உற்பத்தி செலவு குறைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.