இலங்கை
பொய் குற்றச்சாட்டால் பறிபோன உயிர் ; பொலிஸாரின் தவறால் அசம்பாவிதம்

பொய் குற்றச்சாட்டால் பறிபோன உயிர் ; பொலிஸாரின் தவறால் அசம்பாவிதம்
போலி போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
முன்னதாக ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மற்றும் கொஹுவல பொலிஸாரால் 25 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அரச பகுப்பாய்வுக்காக உட்படுத்தப்பட்டது.
இதன்போது அவை போதைப்பொருட்கள் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த 25 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், கைதானவர்களில் ஒருவர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவரது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.