இலங்கை
மாவடிப்பள்ளி ஆற்றில் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

மாவடிப்பள்ளி ஆற்றில் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
53 வயது மதிக்கத்தக்க செங்கலடி பகுதியை சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் கழுத்து, தலை, தோல்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றிய இவர் நேற்று முதல் காணாமல் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சென்று மேற்பார்வை செய்து விசாரணைகளை துரிதப்படுத்தமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அம்பாறை தடயவியல் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.