இலங்கை
மூதூர் பெரியபாலத்தில் மோட்டார் குண்டு கைப்பற்றல்!

மூதூர் பெரியபாலத்தில் மோட்டார் குண்டு கைப்பற்றல்!
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதான வீதி, பெரியபாலம் மூதூர் பகுதியில் வசித்து வரும் என்.எம்.எம். நிமாஸ் அஹமட் என்பவரின் காணியில் மழை காரணமாக , குறித்த மோட்டார் குண்டு வெளிப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, சம்பவம் குறித்து மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.