Connect with us

இலங்கை

வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் திறந்துவைப்பு – பிரதமர் வருகை!

Published

on

Loading

வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் திறந்துவைப்பு – பிரதமர் வருகை!

வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் ஒன்றை பிரதமர் ஹரிணிஅமரசூரிய நேற்று திறந்துவைத்தார். 

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றையதினம்  வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதுடன் நேற்று காலை வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் புதிய நூலக கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். 

Advertisement

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள், மற்றும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். 

மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

Advertisement

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடவோ, அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ எந்த தடையும் இல்லை. 

இருப்பினும், வன்முறை அல்லது நாசவேலைகளை மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. 

அத்துடன் பல்கலைக்கழகங்களை வெறும் பட்டம் வழங்கும் அமைப்புகளாக அல்லாமல், ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்திருந்தார். 

Advertisement

குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் துணைவேந்தர் அ.அற்புதராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன