Connect with us

தொழில்நுட்பம்

வெறும் ரூ.5,895-க்கு சாம்சங் ஸ்மார்ட்போனா?… பட்ஜெட் விலையில் பிரீமியம் அனுபவம்!

Published

on

Samsung Galaxy F05

Loading

வெறும் ரூ.5,895-க்கு சாம்சங் ஸ்மார்ட்போனா?… பட்ஜெட் விலையில் பிரீமியம் அனுபவம்!

ரூ.7,999 என விற்பனை செய்யப்படும் Samsung Galaxy F05 ஸ்மார்ட்போனை, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேலில் வெறும் ரூ.5,895-க்கு வாங்கலாம். சாம்சங் பிராண்ட் போனை இவ்வளவு குறைந்த விலையில் பெறுவது என்பது இந்த விற்பனையின் மிகப் பெரிய சிறப்பம்சமாகும்.Samsung Galaxy F05, அமேசான் தளத்தில் ரூ.6,549-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. SBI வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, ரூ.654 உடனடித் தள்ளுபடியைப் பெற்று, நீங்கள் இதை ரூ.5,895க்கு ஆர்டர் செய்யலாம். இந்த விலைக்கு, வீகன் லெதர் பேனல் கொண்ட பிரீமியம் தோற்றமுடைய சாம்சங் போனைப் பெறுவது, பட்ஜெட் செக்மென்ட்டில் இது தனித்துவமான தேர்வாக அமைகிறது. இந்த ஃபோன் ட்வைலைட் ப்ளூ (Twilight Blue) வண்ணத்தில் கிடைக்கிறது.6.7 இன்ச் HD+ LCD PLS டிஸ்ப்ளே (720 x 1600 பிக்சல்கள்) 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. பெரிய திரையில் வீடியோள், கேம்கள் ரசிக்கலாம். பின்புறத்தில் 50MP மெயின் கேமரா (10X ஜூமிங்) மற்றும் 2MP டெப்த் சென்சார் என டூயல் செட்டப் உள்ளது. Full HD வீடியோ ரெக்கார்டிங் மற்றும் HD ஸ்லோவ் மோஷன் வசதிகளும் உண்டு. செல்ஃபிக்காக 8MP ஷூட்டர் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12nm சிப்செட், அன்றாடப் பயன்பாடுகளுக்கு நம்பகமான செயல்திறனை வழங்குகிறது.4GB RAM+64GB ஸ்டோரேஜ் கொண்டது. 1TB வரை மைக்ரோஎஸ்டி கார்டு ஆதரவு இருப்பதால், ஸ்டோரேஜ் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையிலான OneUI Core 6.0 உடன் வருகிறது. மேலும், 2 ஜெனரேஷன் OS அப்டேட்டுகள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களைப் பெறும் என்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். 5000mAh பேட்டரி, நீண்ட நேரப் பயன்பாட்டிற்கு உகந்தது. இந்த பட்ஜெட்டில் அரிதாகக் கிடைக்கும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்கள். இது 4G மாடல். டூயல் 4G VoLTE, ப்ளூடூத் 5.3, வை-பை 802, GPS ஆகியவை உள்ளன. பாதுகாப்பிற்காக சைடு-மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வசதியும் உண்டு. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன