Connect with us

தொழில்நுட்பம்

6,500mAh பேட்டரி, ஏ.ஐ. மேஜிக், அசத்தும் டிசைன்: ஆக.12-ல் வருகிறது விவோ V60 5G!

Published

on

Vivo V60 5G

Loading

6,500mAh பேட்டரி, ஏ.ஐ. மேஜிக், அசத்தும் டிசைன்: ஆக.12-ல் வருகிறது விவோ V60 5G!

விவோவின் அடுத்த தலைமுறை 5G ஸ்மார்ட்போனான விவோ V60, இந்தியாவில் விரைவில் கால் பதிக்க உள்ளது. ஆகஸ்ட் 12 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் விவோ V60 அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. அஸ்விஷியஸ் கோல்ட் (Auspicious Gold), மிஸ்ட் கிரே (Mist Grey), மூன்லிட் ப்ளூ (Moonlit Blue) ஆகிய 3 கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும்.விவோ V60 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய V50 மாடலின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 ஐ விட மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்கும். இந்த போன் பெரிய 6,500mAh பேட்டரியுடன் வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்.விவோ V60, Zeiss பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் 10x ஜூம் வசதியுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் அடங்கும். இது போர்ட்ரெய்ட் புகைப்படங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும். 50MP பிரதான கேமரா (Sony IMX766 சென்சார்), 50MP அல்ட்ராவைடு லென்ஸ், 50MP செல்ஃபி கேமராவுடன் ZEISS ஆப்டிக்ஸ் இருப்பதால், இது புகைப்படத் துறையில் ஒரு தலைசிறந்த ஃபோனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் Android 15 அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) இல் இயங்கும். மேலும், கூகிள் ஜெமினி (Google Gemini) அம்சங்கள் உட்பட பல AI கருவிகளையும் இது கொண்டிருக்கும். AI Captions, AI Smart Call Assistant போன்ற வசதிகளும் இதில் இடம்பெறும். தூசி, நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதால், விவோ V60 மிகவும் உறுதியானது.6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை 1.5K ரெசல்யூஷன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘குவாட்-கர்வ்’ டிஸ்ப்ளே சிறந்த காட்சி அனுபவத்தை வழங்கும். 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மற்றும் 50 mp செல்ஃபி ஷூட்டர் ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள்.விவோ V60 இந்தியாவில் ரூ.37,000 முதல் ரூ.40,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடல் எண் V2511 உடன் தாய்லாந்து NBTC இணையதளத்தில் தோன்றிய இந்த போன், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும் அந்த பட்டியல் குறிப்பிடுகிறது. விவோ V60 ஆனது, மே மாதத்தில் சீனாவில் அறிமுகமான விவோ S30 உடன் சில அம்சங்களையும் வடிவமைப்பையும் ஒத்திருக்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன