சினிமா
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நடிகைகளுடன் டூயட் பாடிய டாப் நடிகர்.. இவரா?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நடிகைகளுடன் டூயட் பாடிய டாப் நடிகர்.. இவரா?
திரைத்துறையில் ஒரே குடும்பத்தில் இருந்து பல நடிகைகள் சினிமாவில் நடித்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே நடிகருக்கு ஜோடியாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.ஆனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த நடிகைகள் 3 பேர் ஒரே நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். நக்மா முதல் ஜோதிகா வரை இந்த குடும்பத்தில் இருந்த மூன்று நடிகைகளும் டாப் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.அந்த நடிகர் வேறுயாருமில்லை, நடிகர் சிரஞ்சீவி தான். 1992-ம் ஆண்டு நக்மா நடிகர் சிரஞ்சீவியுடன் க்ரான மொஹடு, ரிக்சாவோடு, மூன்று மொனகல்லு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அதை தொடர்ந்து, தமிழில் வெளியான ரமணா படத்தின் ரீமேக்கான தாகூர் படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோதிகா இணைந்து நடித்துள்ளார். அவரது அக்கா ரோஷ்னி, மாஸ்டர் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார்.