இலங்கை
ஓய்வூதியம் நீக்கம் சட்டத்துக்கு முரண்; திஸாநாயக்க தெரிவிப்பு

ஓய்வூதியம் நீக்கம் சட்டத்துக்கு முரண்; திஸாநாயக்க தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படக்கூடாது. அது அரசமைப்பில் உள்ள விடயம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் பலம்பொருந்திய, அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் வறுமை நாடுகளில் கூட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் ஓய்வு காலத்தில் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்கமுடியாது. அது அரசமைப்பில் உள்ள விடயம். தற்போது வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்படவேண்டும். அத்துடன், பணியாள் தொகுதி மற்றும் பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் – என்றார்.