சினிமா
‘சரிகமப’ மேடையில் நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை பாடகி தரங்கினி..!

‘சரிகமப’ மேடையில் நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை பாடகி தரங்கினி..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சரிகமப.தற்போது ‘சரிகமப’ சீனியர் சீசன் 5 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டுடன் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5இல் இந்தவாரம் Dedication Round ஸ்பெஷல் வாரமாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில் நேற்றையதினம் சரிகமப மேடையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் Dedication Round இல் தமது தெரிவு பாடல்களை பாடியுள்ளனர்.அந்தவகையில் இம்முறை இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து சரிகமப நிகழ்வில் கலந்து கொண்டுள்ள உலக பிரபல நாதஸ்வர வித்துவான் பாலமுருகனின் மகளான தரங்கினி, Dedication Round இல் தன்னுடைய தாத்தாவுக்காக “காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா” என்ற பாடலை பாடினார்.இந்நிலையில் அவரின் பாடலை கேட்ட நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அவரது பாடலில் மெய்சிலிர்த்ததுடன், பாடல் நிறைவடைந்ததும் நடுவர்கள் எழுந்து நின்று கைதட்டி தரங்கினியை பாராட்டியதுடன், Dedication Round இல் இது பிளாட்டினம் பெர்போமன்ஸ் என்று அறிவித்தனர்.இதனிடையே தரங்கினியின் தாத்தாவான இலங்கையின் பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி நேரடியாக சரிகமப மேடையில் நடுவர்களுடன் அமர்ந்திருந்து தரங்கினியின் பாடலை ரசித்திருந்தார்.இந்நிலையில் ‘சரிகமப’ மேடையில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தரங்கினிக்கு பிளாட்டினம் பெர்போமன்ஸ் கிடைத்தமைக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.