Connect with us

இலங்கை

சிறப்புரிமைகள் இரத்து நீதிமன்றை நாடுகின்றனர்; முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகள்

Published

on

Loading

சிறப்புரிமைகள் இரத்து நீதிமன்றை நாடுகின்றனர்; முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகள்

சுமார் 500 வரையான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒன்றியம் இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஐந்து வருடகால நாடாளுமன்ற பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாம் பெற்ற சம்பளத்தில் மூன்றில் ஒரு வீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகின்றது.10,15 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்களுக்குத் தாம்பெற்ற சம்பளத்தில் மூன்றில் இரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டுவந்தது.

Advertisement

இந்நிலையில் இதனை நிறுத்துவதற்காக 1977 இல் இயற்றப்பட்ட சட்டத்தைத் திருத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இந்தச் செயற்பாட்டை உடன்நிறுத்த வேண்டும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா ஆகியோருடனும் இது சம்பந்தமாக பேச்சு நடத்த ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன