இலங்கை
சூதாட்ட கூடத்தில் சிக்கிய சஜித் அணியின் பிரதேச சபை உறுப்பினர்

சூதாட்ட கூடத்தில் சிக்கிய சஜித் அணியின் பிரதேச சபை உறுப்பினர்
இபலோகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நடத்தி வந்த சூதாட்டக் கூடத்தை பொலிஸார் சுற்றி வளைத்து, பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்தனர்.
இபலோகம, குஞ்சிக்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டக் கூடம் நடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து இபலோகம பொலிஸார் இன்று (04) நடத்திய சோதனையில் அந்தக் குழுவைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.ஜே.பி பிரதேச சபை உறுப்பினர், சூதாட்டக் கூடத்தை நடத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சூதாட்டக் கூடத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குஞ்சிக்குளம், மடடுகம, கெகிராவ, எப்பாவல, கட்டியாவ, கரம்பேவ, தனவா மற்றும் கல்னேவ உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.