இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 135 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 126 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 30வது நாளாக இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு இன்றைய தினம் இடம்பெற்ற அகழ்வு பணிகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பார்வையிட்டார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை