இலங்கை
மலசலகூட குழியில் சிறுவன் சடலமாக மீட்பு

மலசலகூட குழியில் சிறுவன் சடலமாக மீட்பு
மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் வசிக்கும், தரம் மூன்றில் கல்வி கற்று வந்த சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை அழைப்பு விடுத்தும், ஏழுப்பியும் மகன் வாரததை தொடர்ந்து, தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிந்து கொண்டு இருந்ததை கண்டுள்ளார்.
சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் உயிரிழந்துள்ளான் .
பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.