இலங்கை
யாழில் பிரதமர் ஹரிணி கூட்டத்தில் தூங்கி வழிந்த வடமாகாண கல்வி அதிகாரிகள்!

யாழில் பிரதமர் ஹரிணி கூட்டத்தில் தூங்கி வழிந்த வடமாகாண கல்வி அதிகாரிகள்!
யாழில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்ற கூட்டத்தில் வடமாகாண கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ஹரிணி , நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று கைதடியில் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதான் போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
இது குறித்த புகைப்பட சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் சமூக ஆரவ்ர்கள் விசனம் வெளியிட்டுள்ளானர்.
அதேவேளை இக் கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.