இலங்கை
ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு

ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சாண்ட்ரா பெரேராவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.
அதேவேளை இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.