இலங்கை
வவுனியாவில் களவாடப்பட்ட 25 பவுண் நகைககளுடன் சிக்கிய இளைஞன்!

வவுனியாவில் களவாடப்பட்ட 25 பவுண் நகைககளுடன் சிக்கிய இளைஞன்!
வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது வவுனியா, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.