உலகம்
அமெரிக்காவின் வரிவிதிப்பு- ரஷ்யா கடும் பதிலடி!

அமெரிக்காவின் வரிவிதிப்பு- ரஷ்யா கடும் பதிலடி!
உக்ரைன் – ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் சண்டை உட்பட பல போர்களை தடுத்து நிறுத்தியதாக தம்பட்டம் அடுத்து வரும் டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முடியவில்லை.
இதனால் கோபமடைந்த டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்தார்.
ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார்.இந்தியாவும், ரஷ்யாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக பேசிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, “அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைபட்சமான வரிவிதிப்பை ரஷ்யா எப்போதும் எதிர்த்து நிற்கும்.புதிய காலனித்துவம் மூலம் உலகத்தை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் போக்கை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.[ஒ]