இலங்கை
அஸ்வெசும பங்களிப்பாளராக அமைச்சர்கள் ; ஓய்வு பெற்ற எம்.பிக்கள் எச்சரிக்கை

அஸ்வெசும பங்களிப்பாளராக அமைச்சர்கள் ; ஓய்வு பெற்ற எம்.பிக்கள் எச்சரிக்கை
அமைச்சர் வசந்த சமரசிங்க அஸ்வெசும கொடுப்பனவில் தான் வாழ்கிறாரா என்று யோசனை எழுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலகே தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது பேஸ்புக் பதிவிலேயே நந்தன குணதிலகே குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் வசந்த, உங்கள் சம்பளத்தை உங்கள் கட்சிக்கு பங்களிக்க வேண்டியிருப்பதால், நீங்கள் அஸ்வெசும கொடுப்பனவில் தான் வாழ்வதாய் இருக்கக் கூடும் என்று முன்னாள் எம்.பி. தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும் போது, வாழ வசதி இல்லையென்றால், இலங்கையில் அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு முன்னாள் எம்.பி. விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சமரசிங்க தெரிவித்த கருத்துக்கே நந்தன இவ்வாறு பதிலளித்தார்.
இதேவேளை எம்.பிகளின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
பல ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் தற்போது வயோதிப நிலையில் அல்லது நோயுற்ற நிலையில் உள்ளனர், மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது வணிகத்தில் ஈடுபடுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய ஓய்வூதியம் கூட தங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாத நிலையில், இந்த ஓய்வூதியத்தை ரத்து செய்வது மிகவும் அநீதியானது என ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.