இலங்கை
இலங்கையில் நிலத்துக்கு கீழ் புதைக்கப்பட்ட பல உண்மைகள் (வீடியோ இணைப்பு)

இலங்கையில் நிலத்துக்கு கீழ் புதைக்கப்பட்ட பல உண்மைகள் (வீடியோ இணைப்பு)
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார் என சோமரட்ன ராஜபக்ச தெரிவித்திருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என்று சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது.
அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள்.
இதற்கமைய இன்றைய பரிசோதனையில் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
அந்த தரவுகளை ஆராய்ந்து அது எப்படியாக இருக்குமென்று அனுமானங்கள் செய்து இங்கு வேறு எந்த இடத்திலே மனித எலும்புக் கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதனை அறிந்து அந்தந்த இடங்களிலே அகழ்வுகளை செய்வார்கள்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை