இலங்கை
உலகின் மிகவும் விலையுயர்ந்த பேய் சக்தி கொண்ட பொம்மை ; விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

உலகின் மிகவும் விலையுயர்ந்த பேய் சக்தி கொண்ட பொம்மை ; விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
பொம்மைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். பொம்மைகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு தனித்துவத்தைக் கொண்டுள்ளன.
தற்போது லாபுபு என்ற பொம்மை பிரபலமடைந்து வருகிறது. லாபுபு (Labubu) என்பது ஒரு பிரபலமான பொம்மை. தற்போது இந்த லாபுபு பொம்மை இந்திய மதிப்பில் ரூ.9 லட்சத்திற்கும் (USD 10,500) அதிகமாக விற்பனையாகியுள்ளது.
இது இதுவரை விற்கப்பட்ட இந்த வகை பொம்மைகளில் மிகவும் விலையுயர்ந்த பொம்மையாக மாறியுள்ளது. ஸ்கேட்போர்டில் சவாரி செய்து, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற தொப்பியுடன் வேன்ஸ் தெரு உடையை அணிந்திருக்கும் இந்த பொம்மை, மின் வணிக தளமான eBayஇல் விற்கப்பட்டது.
இது ஹாங்காங்கைச் சேர்ந்த கலைஞர் காசிங் லங் உருவாக்கிய “தி மான்ஸ்டர்ஸ்” என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, லாபுபு, பாப் மார்ட் (Pop Mart) என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொம்மைகளின் வரிசையில் உள்ளது. இந்த பொம்மைகள் அவற்றின் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தோற்றத்திற்காக அறியப்படுகின்றன.
தற்போது அறிமுகம் செய்யப்பட்ட பொம்மையானது இந்திய மதிப்பில் ரூ.9.15 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு அசல் விலையைவிட சுமார் 125 மடங்கு அதிகம். சுவாரஸ்யமாக,. லாபுபு பொம்மைகளை “blind-box” முறையில் விற்கிறது. இது வாங்குபவர்களுக்கு எந்த பொம்மை கிடைக்கும் என்று தெரியாமல் வாங்கும் ஒருமுறை ஆகும்.
கே-பாப் கேர்ள் குழுவான பிளாக்பிங்கைச் சேர்ந்த பாடகர்கள் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இந்த பொம்மைகளை வாங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் இந்த பொம்மையை வாங்கி பெருமையுடன் சுற்றி வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த பலரும் இந்த பொம்மை மீது ஈர்ப்பு ஏற்பட்டு லாபுபு பொம்மைகள் பெரும் புகழ் பெற்றன. இதனால் இந்த பொம்மைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பொம்மைகள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளனர். எனினும், விற்பனை அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. மேலும், இந்த பொம்மைகள் பேய் சக்தியைக் கொண்டுள்ளது என்ற கருத்தும் பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.