இலங்கை
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசியல்வாதிகள்; 6 மாதங்களில் 29 பேர் கைது!

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசியல்வாதிகள்; 6 மாதங்களில் 29 பேர் கைது!
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கடந்த ஆறு மாதங்களில் முன்னாள் அமைச்சர். அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் உட்பட 29 பேரைக் கைது செய்துள்ளது.
இலஞ்சம், சட்டவிரோத சொத்துக் குவிப்பு மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கைது செய்யப் பட்டவர்களைத் தவிர நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 50 வழக்குகள் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.