Connect with us

சினிமா

ஏஜெண்ட் டீனா வெப் சீரிஸ் உருவாகிறது…!லோகேஷ் கனகராஜ் புது அப்டேட்!

Published

on

Loading

ஏஜெண்ட் டீனா வெப் சீரிஸ் உருவாகிறது…!லோகேஷ் கனகராஜ் புது அப்டேட்!

தலைவர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘கூலி’, வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் grand release ஆகிறது. அனிருத் இசையமைக்க, இந்த mass action entertainer படத்தில் ரஜினிகாந்த் உடன் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளன.படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இந்த படம், LCU (Lokesh Cinematic Universe) தொடரின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், ‘விக்ரம்’ படத்தில் பிரபலமான ஏஜெண்ட் டீனா என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒரு தனி இணைய தொடர் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரை லோகேஷ் நேரடியாக இயக்கவில்லை என்றாலும், அவரது நெருங்கிய உதவி இயக்குநர் இயக்க இருக்கிறார்.இந்த தகவலால் LCU ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லோகேஷ் உருவாக்கிய சினிமா பிரபஞ்சம் மேலும் விரிவடைய உள்ள நிலையில், ‘கூலி’ திரைப்படமும், ‘ஏஜெண்ட் டீனா’ தொடரும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை முன்வைக்கவிருக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன