பொழுதுபோக்கு
ஏய்… நான் ரகசியமா வந்துட்டு போறேன்; நீ என்ன ஊரையே கூட்டுற: ஹாஸ்டல் வாசலில் பாய் ஃபிரண்டை கதற விட்ட நடிகை!

ஏய்… நான் ரகசியமா வந்துட்டு போறேன்; நீ என்ன ஊரையே கூட்டுற: ஹாஸ்டல் வாசலில் பாய் ஃபிரண்டை கதற விட்ட நடிகை!
சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை பிரியா பாவனி சங்கர், தனது கல்லூரி காலத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.2011-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாரளாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கியவர் தான் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து, கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த இவர், 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.முதலில் நடித்த இரு படமும் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்விஜயுடன், மாஃபியா, யானை, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர், ஜெயம் ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல தனுஷூன் திருச்சிற்றம்பலம் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வெளியான ருத்ரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெறறிப்படங்களில் நடித்துள்ளார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், டிமாண்டி காலனி 2 திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது டிமாண்டி காலனி 3 படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நேர்காணல் ஒன்றில் தனது வாழ்க்கையில் தான் சந்தித்த தக்லைஃப் சம்பவம் பற்றி சூரியன் எப்.எம் உடனான நேர்காணலில் கூறியுள்ளார்.நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது ரிலேஷன்ஷிப் தொடங்கியது. அப்போது ஹாஸ்டலில் வாரத்தில் 2 மணி நேரம் தான் பர்மிஷன் கொடுப்பார்கள். அப்படி ஒருநாள் பர்மிஷன் கொடுக்கும்போது அவர் காரில் என்னை பிக்கப் செய்துகொண்டு போக வந்தார். உள்ளே வருமபோது என்ன சொல்லிட்டு வந்தார்னு தெரியல, ஆனால் வெளியில் போகும்போது கண்ணாடியை இறக்குங்க என்று செக்யூரிட்டி சொன்னார். அதன்பிறகு என்னை பார்த்து என்ன பையன் கூட போற என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.என்னோட அவுட்டிங் டைம், நான் யார்கூட வேண்டுமானாலும் போவேன். வேணும்னா வார்டனை கூப்பிட்டு கேளுங்க, அவங்க எதாவது சொன்ன என் அப்பா அம்மா நம்பர் தரேன் அவர்களை கேளுங்க., நீங்க யாரை வேண்டுமானாலும் கூப்பிடுங்க நான் இப்படித்தான் போவேன் என்று சொன்னேன். இதுக்கு முன்னாடி அவருக்கு அதே ஹாஸ்டலில் கேர்ள் ப்ரண்ட் இருந்தார். இதை கேட்ட அவர், இதுக்கு முன்னாடி நான் ரகசியமாதானே வந்துட்டு போனேன். நீ என்ன ஊரையே கூப்பிடுற என்று கேட்டார் என ஜாலியாக கூறியுள்ளார்.